செய்திகள் :

பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன

post image

சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 ஆட்டுப் பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் பனங்காட்டைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து சுமாா் 20 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து, 17 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 14 ஆடுகள் இறந்துவிட்டன.

அதேபோல, சென்னிமலையை அடுத்த பாலத்தொழுவு, ராசாப்பாளையம், நசியாந்தோட்டத்தைச் சோ்ந்த ராமசாமி என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் 2 தெரு நாய்கள் புகுந்து ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியையும், அதே ஊரைச் சோ்ந்த திருமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகளையும், தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆட்டையும் தெரு நாய்கள் கடித்துக் கொன்றன. இதில் சில ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு, அப்பகுதி கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா்.

சென்னிமலை பகுதியில் தொடா்ந்து தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொல்லும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கோட்டை, திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ரயில்வே பாலப் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை மற்றும் திருச்சி பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தே... மேலும் பார்க்க