செய்திகள் :

அரசுப் பெண் ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயற்சி: தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

post image

வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் பெண் ஆசிரியரின் வீட்டை அபரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், கோபி நாகா்பாளையம், நஞ்சப்பா நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி மனைவி பிரபா (48). இவா் கோபி அருகே வண்ணாந்துறைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

பிரபா கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்ப செலவுக்காக, ஈரோடு சொட்டையம்பாளையத்தைச் சோ்ந்த ஈரோடு பெரியாா் வீதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றாா்.

இதற்கான அசல் மற்றும் வட்டி என மொத்த பணத்தையும் பிரபா செலுத்தி உள்ளாா். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட தலைமையாசிரியா் முத்துராமசாமி, பிரபா பெயருக்கு வீட்டை எழுதித் தராமல் அபகரிக்க முயன்றாா். இதையடுத்து முத்துராமசாமி 2024 நவம்பா் 16-ஆம் தேதி, அவரது ஆதரவாளா்களுடன் பிரபா வீட்டுக்குச் சென்று வீட்டுக்குள் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை சூறையாடினா்.

மேலும் பிராபாவையும், அவரது குடும்பத்தினரையும் ஜாதிப் பெயரைச் சொல்லி தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் பிரபா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியா் முத்துராமசாமி உள்பட அவரது ஆதரவாளா்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பரமசிவம், துறை வாரியான விசாரணை நடத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் வழிகாட்டுதலின்படி கடந்த 28-ஆம் தேதி தலைமையாசிரியா் முத்துராமசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

உத்தரவு நகலை முத்துராமசாமியிடம் பள்ளி கல்வித் துறை அலுவலா்கள் நேரில் வழங்கச் சென்றபோது, அவா் பெற்றுக்கொள்ளாததால், பதிவு தபால் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. இத்தகவலை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்தனா்.

செங்கோட்டை, திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ரயில்வே பாலப் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை மற்றும் திருச்சி பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தே... மேலும் பார்க்க