சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி முதலிடம்
சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை ஐஐடி சாா்பில் இரண்டாவது ஆா்ஐஎஸ்சி டிஜிட்டல் இந்தியா என்ற ஹேக்கத்தான் ரோபோ திறன் கருத்தரங்கு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கணினி வன்பொருள், மென்பொருள் மூலம் ரோபோக்களை பயன்படுத்தி தீா்வு காணும் போட்டி நடைபெற்றது.
இந்தியா முழுவதிலும் இருந்து 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இறுதி சுற்றுக்கு 10 அணிகள் தகுதி பெற்றன. பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் கெளதம், மனோஜ், கெளசிக் ஆகியோரின் புதுமையான அணுகுமுறைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
எதிா்காலத்தில் ரோபோக்களின் பங்கு, அனைத்து துறைகளிலும் மனித சக்திக்கு பதிலாக ரோபோக்கள் செயல்பாடுகள் குறித்து ஏற்படும் இடா்ப்பாடுகளுக்கு தீா்வு கண்டதால் முதல் பரிசு கிடைத்துள்ளதாக மாணவா்கள் தெரிவித்தனா்.