அவல்பூந்துறையில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 18,875 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.
இதில், தேங்காய் கிலோ ரூ.53.19 முதல் ரூ.67.10 வரையும், சராசரியாக ரூ.64.80-க்கும் ஏலம்போனது.
மொத்தம் 6,739 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.3.77 லட்சத்துக்கு விற்பனையாயின.