ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!
கேரளத்தில் போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பலரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு சோதனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தால் அவ்வப்போது நடத்தப்படுகின்றது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு சோதனை நடத்தியதில் 3 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 9 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் ஒரே போதை ஊசியைப் பயன்படுத்தியதால் ஒருவருக்கு இருந்த பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட்டதாக பரிசோதித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் குறிக்கோள் என மலப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ரேணுகா தெரிவித்துள்ளார்.