செய்திகள் :

Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்?

post image

திகப்படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம்.

அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டா என்பது பற்றி பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசந்தரா.

Hair care

* கற்றாழையிலிருக்கும் நுங்கு போன்ற சதைப்பகுதி நான்கு டீஸ்பூன், பெரிய நெல்லிக்காய் சாறு நான்கு டீஸ்பூன் எடுத்து தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடிகொட்டுதல் பிரச்னை நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும்.

* வறட்சியால் முடி உதிர்கிறது எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி உறுதியோடு இருக்கும். உதிர்வதும் நிற்கும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர வேண்டும்.

bathing

*தலைக்குக் குளிக்கும் நீரில் புதினா ஜூஸ் 10 டீஸ்பூன் கலந்து குளிக்கலாம் அல்லது தண்ணீரை லேசாகக் கொதிக்க வைத்து சிறிது வேப்பிலையை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவிடவும். அரை மணி நேரம் கழித்து சாறு இறங்கிய தண்ணீரை நீங்கள் குளிக்கும் டப்பில் ஊற்றி கூடுதலாக தண்ணீர் சேர்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* அவகாடோ, வாழைப்பழம் இரண்டையும் சம அளவில் எடுத்துக் குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால், கூந்தல் பட்டுபோல மிருதுவாக இருக்கும். கூந்தலின் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

வசுந்தரா

* வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலையில் உருவாகும் சிறுகட்டிகள் மறையும்.

* கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் மூன்றையும் சம அளவில் எடுத்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி 10 நாள்கள் அதை வெயில் படும் இடத்தில் வைக்கவும். பிறகு வாரம் ஒருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

எண்ணெய் தேய்த்த அன்று ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிப்பதைவிட, மறுநாள் உபயோகித்தால் முடி உறுதியுடன் இருக்கும்.

ஷாம்பு

* தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால் இளவயதிலேயே நரை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஷாம்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையை வாங்கி சுடுநீரில் ஊறவைத்து ஒரு மணிநேரம் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Heat Stroke: கோடைக் கால நோய்களைத் தடுப்பது எப்படி? வழிகாட்டும் புதுச்சேரி சுகாதாரத்துறை

கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் வெப்ப அலையின் தாக்கம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ரவிச்சந்திரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், `புதுச... மேலும் பார்க்க

Health: சாப்பிடும்போது ஏன் புரையேறுகிறது? எப்படி தவிர்ப்பது?

நமக்குப் புரையேறிவிட்டால், உடனே அருகே இருப்பவர், வேகமாக நம் தலையில் நாலு தட்டுத் தட்டி, ‘‘யாரோ நினைச்சுக்குறாங்க... தண்ணி குடிங்க” என்று சொல்வது, காலங்காலமாக வரும் வழக்கம். கண்ணீர் வழிய, மூச்சுத் திணற... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை; விபரீதத்தில் முடிந்த இளைஞரின் முயற்சி - நடந்ததென்ன?

நீண்ட நேர வயிற்று வலியைப் பொறுக்காமல், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் யூடியூபைப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ராஜபாபு க... மேலும் பார்க்க

Doctor Vikatan : பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு வருமா ஆட்டிசம் பாதிப்பு? | Autism

Doctor Vikatan: என்னுடைய தோழியின் 8 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேறு பிரச்னைகளுக்காக மனநல மருத்துவரை சந்திக்கச்சென்றிர... மேலும் பார்க்க

Summer & Nannari Sarbath: இதுதான் ஒரிஜினல் நன்னாரி சர்பத்..!

கோடையின் வெயில் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர் ஆகியவற்றின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது ‘நன்னாரி சர்பத்.’ கிராமப்புறங்களில் கோடைக் காலங்களி... மேலும் பார்க்க

Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி!

நுரையீரல், நம் உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்று. இது ஆரோக்கியமாக இல்லையென்றால், நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். அதனால், நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் தடுப்பது எப்படி என்று ச... மேலும் பார்க்க