செய்திகள் :

Doctor Vikatan : பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு வருமா ஆட்டிசம் பாதிப்பு? | Autism

post image

Doctor Vikatan: என்னுடைய தோழியின் 8 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேறு பிரச்னைகளுக்காக மனநல மருத்துவரை சந்திக்கச் சென்றிருந்தாள் என் தோழி. அப்போது அவளுக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். பொதுவாக பெற்றோருக்கு ஒரு பாதிப்பு இருந்தால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் வருவது இயல்பு... ஆனால், குழந்தையின் ஆட்டிசம் பாதிப்பு எப்படி பெற்றோரை பாதிக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மருத்துவர் சொன்ன தகவலை உங்கள் தோழியும் நீங்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. முதலில் அதில் தெளிவு பெறுங்கள். அதாவது, ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு சில பெற்றோர்கள் தங்களுக்கு ஆட்டிசம் இருப்பதை உணர்வது என்பது இயல்பானதுதான்.

ஆட்டிசம் என்பது ஒருவித மரபியல் குறைபாடு. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருந்தால், பெற்றோர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ ஆட்டிசம் தொடர்பான பண்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முந்தைய தலைமுறையில் ஆட்டிசம் குறித்த விழிப்பு உணர்வு குறைவு. பலரும் தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அதுவே, பின்னாளில் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியவரும். அதன் தொடர்ச்சியாக மருத்துவருடனான உரையாடலில், பரிசோதனையில், பெற்றோருக்கும் அந்த பாதிப்பு ஏற்கெனவே இருந்ததை மருத்துவர் சொல்வார். 

இன்னும் சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்ததும், அது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவார்கள். அப்போது அவர்கள் கேள்விப்படுகிற, பார்க்கிற பல அறிகுறிகள், நடத்தை பிரச்னைகள் தங்களுக்கும் ஏற்கெனவே இருந்ததை உணர்வார்கள். 

தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போல அல்லாமல் பெற்றோர்கள் மிதமான அறிகுறிகளோடு வாழ்ந்திருப்பார்கள். எனவே, பிற்காலத்தில் இது தெரியவரும்போது, 'ஆட்டிசமா... எனக்கா.... நான் நல்லாத்தானே படிச்சேன்... நல்லாத்தானே வேலை பார்த்தேன்...' என்று அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.  தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் குழந்தையையும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். தேவைப்பட்டால் பெற்றோரும் உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம்.

மற்றபடி இது குறித்து குற்ற உணர்வு கொள்வதோ, குழம்புவதோ தேவையில்லாதது. 'என்னைப் போல ஒருவன் அல்லது ஒருத்தி' என குழந்தையை அரவணைத்து, சிறப்பாக வளர்க்க முயற்சி செய்வதுதான் சரியான அணுகுமுறை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Apollo Cancer Centre: கோல்ஃபிட் (ColFit) என்ற பெயரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) அறிமுகம்

இந்தியாவெங்கும் மலக்குடல் புற்றுநோய் (CRC) நேர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் விதத்தில் ஆரம்ப நிலையிலேயே மலக்குடல் புற்றுநோயைக் கண்டறியவும் மற்றும் அது உருவாகாமல் தடுக்கவும் வடிவமை... மேலும் பார்க்க

Aruna cardiac care-Tirunelveli: அதிநவீன தொழில்நுட்பம் சர்வதேச தரம்; நெல்லை அருணா கார்டியாக் கேர்

நெல்லை அருணா கார்டியாக் கேர்( Aruna cardiac care - Tirunelveli)அதிநவீன தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்துடன் அறிமுகப்படுவதில் தமிழகத்தில் முன்னோடி மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட O... மேலும் பார்க்க

Summer Health Care: வியர்க்குரு முதல் நீர்க்கடுப்பு வரை; வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம்?!

வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. கோடையின் தொடக்கமே இப்படி என்றால், அக்னி வெயிலை எப்படிச் சமாளிப்பது என்கிற பதற்றம் வருகிறது. அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயில... மேலும் பார்க்க

Summer: கறுப்பு நிற ஆடை அணிந்தால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? | சம்மர் டிப்ஸ்!

கோடைகாலம் வந்தவுடன் நம்முடைய இயல்பு வாழ்க்கையின் அன்றாட விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெயிலில் இருந்து தற்காத... மேலும் பார்க்க

Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் அவசியம் என்பது எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. ஆனால், அவரவர் சூழல் காரணமாக, நம்மில் பலரால் தினமும் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க முடிவதில்லை என்பதே நிஜம். தூக்கம் ... மேலும் பார்க்க

Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்?

அதிகப்படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டா என்பது பற்றி பேசுகிறார் சென்னைய... மேலும் பார்க்க