அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்
யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை; விபரீதத்தில் முடிந்த இளைஞரின் முயற்சி - நடந்ததென்ன?
நீண்ட நேர வயிற்று வலியைப் பொறுக்காமல், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் யூடியூபைப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
ராஜபாபு குமார் என்ற இளைஞர் இதற்காக கடந்த புதன் அன்று மாலையில் வீட்டில் ஒரு அறையில் தன்னைத் தானே பூட்டிக்கொண்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு மரத்துப்போகச் செய்யும் ஊசியைப் போட்டுக்கொண்டுள்ளார். தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றின் கீழ் வலதுபுறத்தில் 7 செ.மீ அளவில் கீறல் போட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை கத்தி நினைத்ததை விட ஆழமாக வெட்டியதால் அதீத வலி ஏற்பட்டதுடன், ரத்தம் சொட்டத் தொடங்கியுள்ளது. ராஜபாபு உடனடியாக அவரே காயத்தைத் தைக்கத் தொடங்கியுள்ளார். ஆனாலும் ரத்தம் கொட்டுவது நிற்காததால், குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
ராஜபாபு கூறியதைக் கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் உடனடியாக மதுரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையை அடைந்த உடனேயே அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதை மருத்துவர்கள் அறிந்துகொண்டுள்ளனர். ஆக்ராவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். .
வியாழக்கிழமை வரை ராஜபாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளார்.
மருத்துவ அதிகாரி கூறியதென்ன?
மதுரா மருத்துவமனையில் இருந்த ஷஷி ராஜன் என்ற மருத்துவ அதிகாரி, " ராஜபாபு 7 க்கு 1 செ.மீ என்ற அளவில் வயிற்றின் வலதுபக்கம் கீழ் பகுதியில் துளையிட்டுள்ளார். 10-12 தவறான தையல்களும் போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு சரியான தையல் போட்ட பிறகு சிகிச்சைக்காக ஆக்ரா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
ராஜபாபு தனக்கு ஏற்கெனவே குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதே இடத்தில் மீண்டும் வலி ஏற்படுவதாகவும் சமீபமாக கூறிவந்துள்ளார்