செய்திகள் :

Health: சாப்பிடும்போது ஏன் புரையேறுகிறது? எப்படி தவிர்ப்பது?

post image

மக்குப் புரையேறிவிட்டால், உடனே அருகே இருப்பவர், வேகமாக நம் தலையில் நாலு தட்டுத் தட்டி, ‘‘யாரோ நினைச்சுக்குறாங்க... தண்ணி குடிங்க” என்று சொல்வது, காலங்காலமாக வரும் வழக்கம். கண்ணீர் வழிய, மூச்சுத் திணற வைத்துத்தான், யாரோ நம்மை நினைக்க வேண்டுமா? ஏன் புரையேறுகிறது? புரையேறினால் என்ன செய்ய வேண்டும்?

நீர் அருந்தும்போது புரையேறுதல்

உணவை மெதுவாக மென்று தின்பதுதான் சரியான உண்ணும் முறை. நேரம் இன்மையால் நாம் உணவைச் சரியாக மெல்வதும் கிடையாது, பொறுமையாக விழுங்குவதும் கிடையாது. இதனால்தான் புரையேறுகிறது.

நாம் உண்ணும் உணவை நேரடியாக வயிற்றுக்குள் செலுத்துவதற்கும், தவறுதலாக நுரையீரலுக்குச் செல்லாமல் தடுப்பதற்கும், த்ரீ டயர் மெக்கானிசம் (3 Tier mechanism) என்ற தடுப்புகள் உள்ளன. உண்ணும்போது இந்தத் தடுப்புகள் சரியாக மூடாமல்போனால், விழுங்கும் உணவு, உணவு குழாய்க்குச் செல்லாமல், நேராக மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு உண்டு. அப்போது, மூச்சுக் குழாய்க்குச் சென்ற உணவை வெளியேற்ற, நுரையீரல் அதிகமான அழுத்தத்துடன் காற்றை அனுப்புகிறது, இதனால், மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவு, வாய் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறுகிறது. இதையே புரையேறுதல் என்கிறோம்.

புரையேறுதல்

இப்படிப் புரையேறும்போது, மூச்சுக் குழாய்க்குச் சென்ற உணவு வெளியேறும் என்ற நம்பிக்கையில், தலையில் தட்டுகின்றனர், இதனால் பயன் இல்லை. உடனடியாகத் தண்ணீர் அருந்தவும் தேவை இல்லை. எந்த உணவாக இருந்தாலும், அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்த்து, மெதுவாக, கவனத்துடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே பாதுகாப்பானது. சாப்பிடும்போதும் நீர் அருந்தும்போதும் பேசுவதை, சிரிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை; விபரீதத்தில் முடிந்த இளைஞரின் முயற்சி - நடந்ததென்ன?

நீண்ட நேர வயிற்று வலியைப் பொறுக்காமல், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் யூடியூபைப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ராஜபாபு க... மேலும் பார்க்க

Doctor Vikatan : பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு வருமா ஆட்டிசம் பாதிப்பு? | Autism

Doctor Vikatan: என்னுடைய தோழியின் 8 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேறு பிரச்னைகளுக்காக மனநல மருத்துவரை சந்திக்கச்சென்றிர... மேலும் பார்க்க

Summer & Nannari Sarbath: இதுதான் ஒரிஜினல் நன்னாரி சர்பத்..!

கோடையின் வெயில் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர் ஆகியவற்றின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது ‘நன்னாரி சர்பத்.’ கிராமப்புறங்களில் கோடைக் காலங்களி... மேலும் பார்க்க

Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி!

நுரையீரல், நம் உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்று. இது ஆரோக்கியமாக இல்லையென்றால், நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். அதனால், நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் தடுப்பது எப்படி என்று ச... மேலும் பார்க்க

`பரபரப்பாக வேலை செய்யும் ஆண்களே!' இந்தச் சத்து குறைவாக இருக்கிறதா? - வெளிவந்த ஆய்வு

இவ்வுலகில் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் வேலை நிமித்தம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அவரவர் உடல் நிலையை கவனி... மேலும் பார்க்க

Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனையும் பாதுகாப்பானதா?

'வெயிட் லாஸ் செய்யணும்', 'மாவுச்சத்தைக் குறைக்கணும்', 'புரதம் அதிகமிருக்கிற உணவுகள் சாப்பிடணும்', 'நல்ல கொழுப்பு கட்டாயம் சாப்பிடணும்', 'கலர்ஃபுல்லா சாப்பிட்டா கேன்சர் வராம தடுக்கலாம்' - இப்படி உடல் எ... மேலும் பார்க்க