செய்திகள் :

சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!

post image

பங்குச் சந்தை இன்று(மார்ச் 24) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,456.27 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 2.19 மணியளவில், சென்செக்ஸ் 1,133.51 புள்ளிகள் அதிகரித்து 78,039.02 புள்ளிகளில் இருந்தது. கடந்த பிப். 7 ஆம் தேதிக்கு முன்னதாக சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 350 புள்ளிகள் உயர்ந்து 23,700 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டியும்

இதையும் படிக்க | காய்ச்சலுக்கு ஆன்டி - பயாடிக் எடுக்கலாமா? தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது? - மருத்துவர் சொல்வது என்ன?

சென்செக்ஸ் பங்குகளில்,, என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட், எஸ்பிஐஎன், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆர்ஐஎல், எல் அண்ட் டி, டிசிஎஸ், மாருதி சுசுகி போன்றவை அதிக லாபம் ஈட்டின.

சன் பார்மா, பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், சொமாடோ, டைட்டன் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலைய... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிவு!

மும்பை: இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.7... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 7-வது அமர்வாக உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை ஓரளவு உயர்ந்து முடிந்தது.வர்த்தக நே... மேலும் பார்க்க

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10 மணியளவில்,... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்... மேலும் பார்க்க

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள... மேலும் பார்க்க