செய்திகள் :

பிரம்மயுகம் கூட்டணியில் இணைந்த பிரணவ் மோகன்லால்!

post image

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.

இதையும் படிக்க: பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். பெரும்பாலும் கேரளத்தில் இருக்க மாட்டார்.

இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது, இக்கூட்டணியின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதுவும் ஹாரர் படமாகவே உருவாகிறது.

மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படம் கருப்பு வெள்ளை திரைப்படமாகவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.80 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் பேமிலி வெளியீட்டுத் தேதி!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றி பெற்று மீண்டும் சசிகுமாருக... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26-03-2025புதன்கிழமைமேஷம்:இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்க சுற்றில் சுனில்

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில்குமாா் ஆடவருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளாா்.கிரேக்கோ ரோமன் பிரிவில் களம் கண்டுள்ள அவா், தனது க... மேலும் பார்க்க

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினாா் கௌஃப்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்ற... மேலும் பார்க்க

உருகுது உருகுது மேக்கிங் விடியோ!

விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோ வெளியானது. சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் கவி... மேலும் பார்க்க