செய்திகள் :

Noor Ahmad: `மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது.!’ - முதல்போட்டி குறித்து நூர் அகமது

post image

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக விளங்கும் சென்னை (CSK) vs மும்பை (MI) போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் அடித்தது. அதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, ஒப்பனர் ரச்சின் ரவீந்திரா, ஒன்டவுன் ருத்துராஜ் கெய்க்வாடின் அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்தில் 158 ரன்கள் எட்டி வெற்றிபெற்றது.

தோனி - சூர்யகுமார் யாதவ்
தோனி - சூர்யகுமார் யாதவ்

இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் சென்னை சார்பில் 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், திலக் வர்மா, நமன் திர் ஆகியோரின் விக்கெட்டுகளை அள்ளிய நூர் அஹமது ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக, இவரின் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவை தோனி எப்போதும் போல மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.

மெகா ஏலத்தின்போது பெரும் தொகையாக ரூ.10 கோடிக்கு தன்னை எடுத்த சென்னை அணியின் நம்பிக்கையை நூர் அகமது தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று காப்பாற்றியிருக்கிறார்.

`மஹி பாய் போன்ற ஒருவர்..!'

சி.எஸ்.கே-வில் முதல் போட்டி குறித்து பேசிய நூர் அஹமது, “ஐபிஎல் போட்டிகளில் இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் ஸ்பெஷல். சிஎஸ்கே அணிக்காக என்னுடைய பங்களிப்பை கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நூர் அஹமது
நூர் அஹமது

சரியான இடத்தில் பந்தை டெலிவரி செய்வது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால்தான் இப்படி என்னால் விளையாட முடிந்தது. சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஸ்பெஷல். மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்" என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி"விராட் கோலியை பொறுத்தவரை அவர... மேலும் பார்க்க

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செ... மேலும் பார்க்க

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க