TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ
கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கோபி அருகேயுள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (60). இவா் அதே பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி மையம் நடத்திவருகிறாா். இந்நிலையில், உற்பத்தி மையத்தில் சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அனைத்து இடங்களுக்கும் தீப்பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரா்கள் கூறும் நிலையில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.