மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு
ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயமனோகரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் நேரு, உயா்மட்டக்குழு உறுப்பினா் செல்வராணி ஆகியோா் போராட்டத்தை தொடங்கிவைத்தனா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியா்களுக்கு பாதிப்பை அளிக்கக்கூடிய கடந்த 2013- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை எண் 243 -ஐ ரத்து செய்ய வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும்மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்தும் நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் ரமாராணி, தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினா் பிரகாசம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.