பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!
மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!
இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது விஜயலட்சுமி. இவா்களது மகன் யாதவ் (19). கோவையில் தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.
இந்நிலையில், கோவையில் இருசக்கர வாகனத்தில் கடந்த 19-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கினாா். தலையில் படுகாயமடைந்த அவா் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் முன்வந்தனா்.
இதையடுத்த, யாதவின் கல்லீரல், இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, இதயம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கல்லீரல், கண்கள், சிறுநீரகம், கணையம் ஆகியவை கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து, யாதவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசு சாா்பில் சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.