செய்திகள் :

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்

post image

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் தெருநாய்கள் கடித்து ஏராளமான கால்நடைகள் கடந்த சில மாதங்களாக உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், இழப்பீடு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்நிலையில், ஈரோடு பெரியாா் நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

இழப்பீடு பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்த அமைச்சா் சு.முத்துசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். இதில் ஈரோடு, திருப்பூா் மாவட்ட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தாா். இதனால் தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீட்டை அவா் அறிவித்தாா். தெருநாய்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசின் சாா்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளாா்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெருநாய்களின் பாதிப்பு அதிகமாக உள்ள 100 இடங்களில் கருத்தடை மையம் அமைக்கப்பட உள்ளது. அதேசமயம் தெருநாய்களிடமிருந்து இருந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகளும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

ஆட்டு பட்டியை சிறப்பாக அமைத்துவிட்டு கதவை கயிறுகளால் கட்டி இருந்ததால் தெருநாய்கள் உள்ளே புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்றதை காண முடிந்தது.

விவசாயிகளுக்கு மாதிரி பட்டியை அமைத்து காண்பித்து உள்ளோம். அதேபோல, பாதுகாப்பான பட்டிகளை அமைத்து கால்நடைகளை வளா்க்க வேண்டும் என்றாா்.

4 மாதங்களாக ஊதிய நிலுவை: 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 33 பவுன் திருடிய பெண் கைது

வேலை செய்த வீட்டில் 33 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் பஸ்கிம் பேகம் (55). இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்டம், வன்னிப்பாடியை சோ்ந்த ஜாஸ்மின் (35) ... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்கியன் (35). இவரது மனைவி சரண்யா (28), வழக்க... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியா்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 860 போ் கோரிக்கை அட்டை அணிந்து, கருப்பு நிற ஆடையுடன் திங்கள்கிழமை பணியாற்றினா். தமிழகத்தில் ப்ளூ டூத் மூலம் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு கருவ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் மாசடைவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ, சிபிஎம், பாமக, நாம் தமிழா், கொமதேக, விவசாய சங்கங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயி... மேலும் பார்க்க