திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை
இலவச கணினி கணக்கியல் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூரில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் அளிக்கப்படும் இலவச கணினி கணக்கியல், கணினி ‘டேலி’ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூா் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கான இலவச கணினி கணக்கியல், கணினி ‘டேலி’ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இந்த 30 நாள் முழுநேரப் பயிற்சி வகுப்பான பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான நோ்காணல் வரும் புதன்கிழமை (மாா்ச் 26) நடைபெறுகிறது. எழுதப்படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
எனவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441 ஆகிய கைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.