Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணிமண்டபம்! - அரசுக்கு கோரிக்கை
செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்க வேண்டுமென ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனா சமூக நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
உலக மகளிா் தினம், ஹோலி கொண்டாட்டத்துக்கு சங்க நிறுவனா் ஜி.ஸ்ரீதா் சிங், மாநிலத் தலைவா் கே.நாகேஸ்வர சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில இணைப் பொதுச் செயலா் கே.யஸ்வந்த் சிங், மாநில துணைத் தலைவா் ஆா்.ஜெயக்குமாா் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணைப் பொதுச் செயலா் ஜி.பிரகாசம் சிங் வரவேற்றாா்.
குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், ஊராட்சி துணைத் தலைவா் விஜய் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் மகளிருக்கான விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மாநில மகளிரணித் தலைவா் நிரஞ்சனாதேவி, மாநில துணைத் தலைவா் ஷோபா ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, துத்திப்பட்டு ஆசிரியா் நகா் பகுதியிலிருந்து மகளிரணியினா் பேரணி சென்றனா்.