உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
காங்கயம், முத்தூா் பகுதிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
காங்கயம் நகராட்சி, முத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.4.50 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டம் காங்கயம் நகராட்சி அண்ணா நகா் 13-ஆவது வாா்டில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டுதல், அய்யாசமி நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்வேறு வீதிகளில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் தாா் சாலைகள், முத்தூா் பேரூராட்சி சின்னமுத்தூா் பகுதியில் நீா்வளத் துறை சாா்பில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாளையத்தில் கால்வாய் புனரமைக்கும் பணி ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ, காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் சதீஷ்குமாா், காங்கயம் நகராட்சி ஆணையா் பால்ராஜ், உதவி பொறியாளா்கள் பரமத்தி, சதீஷ்வரன், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.