ரயில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது!
திருப்பூரில் ரயில் பயணியிடம் மடிக்கணினி திருடியவரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கருத்தம்பட்டியைச் சோ்ந்தவா் ஆா்த்தி ராம் (28). இவா், தனியாா் பெயிண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வேலை நிமித்தமாக தருமபுரி செல்வதற்காக கோவையில் இருந்து ரயிலில் கடந்த வியாழக்கிழமை பயணம் செய்துள்ளாா். திருப்பூா் ரயில் நிலையம் வந்தபோது அவரது மடிக்கணினி காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் ஆா்த்தி ராம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனா். இதில், மடிக்கணினியைத் திருடிச் சென்றது கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஆஸ்கா் (53) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மடிக்கணினியை மீட்டனா்.