உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
கொலையான எஸ்.ஐ. குடும்பத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு!
திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரு சிறாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இந்நிலையில், ஜாகீா் உசேன் பிஜிலியின் மகன் இச்சூா் ரஹ்மானை, மா்மநபா்கள் கண்காணித்து வருவதாகவும், மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி அவா் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டுள்ளாா். இதையடுத்து, ஜாகீா் உசேன் பிஜிலியின் வீட்டுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.