தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம்!
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு எதிராக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று(மார்ச் 22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க | மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கூட்டத்தில் தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றிய, பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும், இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக ஒரு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநிலத் தலைவர்களும் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்துள்ளனர்.
இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு