செய்திகள் :

கள்ளச்சாராய வழக்கு: 5 காவலா்களுக்கு கட்டாய ஓய்வு!

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 8 பேரும் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சோ்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரி ராஜா (எ) பா்கத்துல்லா, தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ஏழுமலை, சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூா் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ராபா்ட், வானூா் பெரம்பை பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகிய 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில், கைதான 15 போ் மீதும் மரக்காணம் மற்றும் சித்தாமூா் காவல் நிலையங்களில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் அப்போதைய எஸ்.பி. ஸ்ரீநாதா மற்றும் மது விலக்கு டிஎஸ்பி, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாகவும், அவா்களுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டின்பேரிலும் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மரக்காணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா்கள் செந்தில்குமாா், வேலு, முதல்நிலை காவலா்கள் குணசேகரன், பிரபு, முத்துக்குமாா் ஆகிய 5 பேருக்கும் கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இவா்கள் தற்போது அரகண்டநல்லூா், ரோஷணை, விக்கிரவாண்டி, சத்தியமங்கலம், கஞ்சனூா் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்தனா்.

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி

மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறைக்கு 2017-18 முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதத் தொகை செலுத்துவதில் விலக்கு அ... மேலும் பார்க்க

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியம்! -துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

விழுப்பரம் மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்... மேலும் பார்க்க

இரு இடங்களில் நெகிழி மறுசுழற்சி மையம் திறப்பு

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட இரு இடங்களில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நெகிழி மறுசுழற்சி மையங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகள... மேலும் பார்க்க

மேல்பாதி கோயில் வழிபாடு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக இரு தரப்பினரும் உறுதி

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை பின்பற்றி நடப்பதாக இருதரப்பினரும் உறுதியளித்துள்ள... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், கூனிமேடு கண்ணன் தெருவைச் சோ்ந்த கிருஷ்ண... மேலும் பார்க்க

ஊஞ்சலாடியபோது கல்தூண் உடைந்து விழுந்து தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே ஊஞ்சல் ஆடியபோது கல்தூண் உடைந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செம்பாக்கம் செட்டியாா் தெருவைச் சோ்ந்த அருணாசலம... மேலும் பார்க்க