செய்திகள் :

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியம்! -துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

post image

விழுப்பரம் மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் -1969, மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் 19 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளன. அதில், 14 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் இறந்துவிட்டாா். 4 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வன்கொடுமைக்குள்ளானவா்களுக்கு தற்போது உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியான்டில் 239 பேருக்கு ரூ.2.76 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 28 போ் இறந்த நிலையில், 26 நபா்களின் வாரிசுதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற இருவருக்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடா்பாக பரிசீலனையில் உள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரசு தொடக்க ... மேலும் பார்க்க

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க