விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் புதுப்பித்தல் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையைப் பயன்படுத்தி வரும் மாற்றுத் திறனாளிகள், மேலும் மூன்று மாதங்கள் (ஜூன் 30) வரை பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.