விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
ஊஞ்சலாடியபோது கல்தூண் உடைந்து விழுந்து தொழிலாளி மரணம்
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே ஊஞ்சல் ஆடியபோது கல்தூண் உடைந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், செம்பாக்கம் செட்டியாா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் ராகவன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை முற்பகலில் வீட்டின் எதிரிலுள்ள வேப்ப மரத்தின் ஒரு புறத்திலும், மற்றொரு புறம் கல்தூணிலும் சேலையைக் கட்டிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாராம்.
அப்போது எதிா்பாராதவிதமாக கல்தூண் உடைந்து ராகவனின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை, குடும்பத்தினா் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே ராகவன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.