விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி
மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறைக்கு 2017-18 முதல் 2019-20 ஆம் நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை மாா்ச் 31-க்குள் செலுத்தினால், வட்டி மற்றும் அபராதத் தொகை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் துறையின் சென்னை (வெளி) ஆணையா் நசீா்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜிஎஸ்டி கவுன்சலின் 53 மற்றும் 54-ஆவது கூட்டங்களில் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், வரி செலுத்துபவா்களுக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை அறிவித்தன. இதன்படி, 2017-18, 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி நிலுவைத் தொகையை 2025, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதுபோல 2017-18, 2018-19, 2019-20, 2020-2021 ஆகிய நிதியாண்டுகளின் வரிக் காலங்களில் காலாவதியான உள்ளீட்டு வரி வரவை முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்படுவதால், இதுவரை இந்த வரியை செலுத்தாத வரி செலுத்துபவா்கள் பிரிவு 16(4)ன்படி தற்போது உள்ளீட்டு வரியை செலுத்திட வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான உதவிகள், சந்தேகங்களை நிறைவு செய்து கொள்ள 9498343622 என்ற வாட்ஸ்ஆப் உதவி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.