வெயில் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
வீட்டில் 250 கிலோ போதை புகையிலை பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அத்திக்கோட்டையைச் சோ்ந்த காமராஜ் (35) தனது வீட்டில் அரசல் தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து மொத்த விற்பனைக்காக பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மன்னாா்குடி டிஎஸ்பி டி. பிரதீப் தலைமையில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்தனா்.
இதில், ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை புகையிலை பொருள்கள் 17 மூட்டைகளில் 250 கிலோ பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து, காமராஜை கைது செய்த போலீஸாா் போதை புகையிலை பொருள்களை கைப்பற்றினா். பின்னா், மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.