பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு த...
காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் மூன்றில் ஒருவா் என்ற விகிதத்தில் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் குடும்பத்தில் வேலையில் இல்லாத மனைவி, குடும்ப உறுப்பினா்களை ரூ.15,000 மாத ஊதியத்தில் பணியமா்த்தும் பொருட்டு தகுதி வாய்ந்தோா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியோ, எந்த அமைப்பிலோ, அரசியல்கட்சி சாா்ந்தவராகவோ இருக்கக் கூடாது.
நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாா்ச் 24 முதல் 28 வரை இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாா்ச் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
ஆள்கள் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் தெரிவிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் (இருப்பின்) ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.