செய்திகள் :

IPL 2025: விதிகளை மீறினால் 5 போட்டிகளில் ஆட தடை? Demerit Points System Explained!

post image

18 வது ஐ.பி.எல் சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில், பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை இப்போது அறிவித்திருக்கிறது. அதில், வீரர்களோ அணியின் பயிற்சியாளர் குழுவோ விதிகளை மீறினால் 5 போட்டிகள் வரைக்கும் தடை விதிக்கும்படி 'Demerit Points System' என்ற விதியையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

பிசிசிஐ

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் சில ஒழுங்கு நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு மைதானத்துக்குள் ஆவேச சொற்களில் பேசுவது மற்ற வீரர்களோடு சண்டையிடுவது போன்றவற்றை வீரர்கள் செய்யவே கூடாது. இதேமாதிரி, சில ஒழுங்கு நடைமுறைகள் இருக்கும். அதை மீறுபவர்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ரொம்பவே தீவிரமான ஒழுங்கு நடைமுறை மீறலாக இருந்தால் மட்டுமே போட்டியில் ஆடுவதற்கு தடை வரை விதிக்கப்படும். இப்போது பிசிசிஐ இதை ஒழுங்குப்படுத்தி 'Demerits Points System' என கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒரு வீரர் விதியை மீறி செயல்பட்டால் அவருக்கு மதிப்புக் குறைவு புள்ளிகள் வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் வரைக்கும் இந்த மதிப்புக் குறைவு புள்ளிகள் உயிர்ப்போடு இருக்கும்.

அதன்படி அந்த மூன்று ஆண்டுகளுக்குள் 4-7 மதிப்புக்குறைவு புள்ளிகளை பெற்றிருந்தால் 1 போட்டியில் ஆட தடையும் 8-11 புள்ளிகளை பெற்றிருந்தால் 2 போட்டிகளில் ஆட தடையும், 12-15 புள்ளிகளை பெற்றிருந்தால் 3 போட்டிகளில் ஆட தடையும், அதற்கு மேல் போனால் 5 போட்டிகளில் ஆட தடையும் விதிக்கப்படும். இதுதான் 'Demerit Points System'

இதுபோக வேறுசில புதிய நடைமுறைகளையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதாவது, கொரோனா சமயத்தில் வீரர்கள் பந்தில் எச்சில் தொட்டு தடவக்கூடாது என கண்டிப்பாக கூறப்பட்டிருந்தது. இப்போது அதற்கு விலக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காற்றில் ஈரப்பதத்தின் தாக்கத்தினால் இரண்டாவதாக பந்துவீசும் அணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. பந்து ஈரமாகி பௌலர்கள் வீச நினைக்கும் லெந்தில் வீச முடியாமல் போகிறது. அதற்கு தீர்வு கட்டும் வகையில் இரண்டாவதாக பந்துவீசும் அணி 11 வது ஓவருக்கு மேல் விருப்பப்பட்டால் இரண்டாவதாக இன்னொரு பந்தை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது. அந்த இரண்டாவது பந்து புதிய பந்தாக இருக்காது. ஓரளவு சேதமடைந்த பந்தாக இருக்கும்.

Shardul Thakur

அதேமாதிரி, நோ-பால் மற்றும் ஒயிடுக்கு எடுக்கப்படும் ரிவியூவ்க்களின் போது ஹாக் - ஐ, பால் டிராக்கிங் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் எனவும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

IPL 2025 : 'தோனியோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!' - CSK-வின் முன்னாள் வீரர் பாலாஜி பேட்டி

18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் ஐ.பி.எல் யை ஒளிபரப்பவிருக்கும் JioStar நிறுவனம் அவர்களின் Expert குழுவை சேர்ந்த முன்னாள் வீரர் பாலாஜியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செ... மேலும் பார்க்க

KKR Vs RCB : 'ஈடன் கார்டனில் மழை பெய்தால் என்ன நடக்கும்?' - Kolkata Weather Report

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி இன்று இரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. கொல்கத்தாவும் பெங்களூரும் மோதப்போகும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வானிலை... மேலும் பார்க்க

IPL 2025: தொடக்கவிழாவில் கலக்கும் ஷாரூக்கான், சல்மான் கான்! - முழு விவரம்

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 18வது சீசன் இன்று தொடங்க உள்ளது . ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை காண எவ்வள... மேலும் பார்க்க

'5 ஒலிம்பிக்ஸ் போயிட்டேன் ஆனாலும்..' - Sharath Kamal about his Career and Indian Sports | Vikatan

சரத் கமல், இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகம். ஒரு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்று 'ஒலிம்பியன்' என்ற பெருமையை பெறுவதே பல வீரர்களுக்கும் வாழ்நாள் கனவு. அப்படியிருக்க சரத் கமல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங... மேலும் பார்க்க

MI : '2 நிமிட தாமதத்தால் கேப்டன்சிக்கு தடை; சூர்யா மும்பை அணியை வழிநடத்துவார்!' - ஹர்திக் அறிவிப்பு

18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்... மேலும் பார்க்க