`ரூ.1 லட்சம் இழப்பீடு' - மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர...
நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும்: ஃபட்னவீஸ்
நாக்பூர் வன்முறையால் ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்ட செலவை கலவரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் சொந்த ஊரான மத்திய நாக்பூரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மார்ச் 17 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களைத் தடியடி நடத்தி காவல் துறையினர் கலைத்தனர். இதில், காவலர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்தநிலையில் வன்முறையால் ஏற்பட்ட சேதத்தின் நஷ்ட செலவை, கலவரம் செய்தவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். ஈடுசெய்யத் தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு இழப்புகளை ஈடுகட்டப்படும் என்று அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஃப்னாவீஸ்,
கலவரத்தின் போது காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தை "உளவுத்துறை தோல்வி" என்று கூற முடியாது, ஆனால் உளவுத்துறை சிறப்பாக இருந்திருக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
சிசிடிவி காட்சிகள், விடியோ பதிவுகளின் பகுப்பாய்வைத் தொடர்ந்து இதுவரை
இந்த சம்பவத்தில் மொத்தம் 105 பேர் கைதாகியுள்ளனர். இதில் 12 சிறார்கள் உள்பட 92 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30 அன்று நாக்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், வன்முறையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஃபட்னாவிஸ் கூறினார்.