செய்திகள் :

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

post image

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனெளரி-ஷம்பு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், சண்டீகரில் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் செளஹான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோா் அடங்கிய மத்திய குழுவுடன் விவசாயிகள் கடந்த புதன்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டக் களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜகஜித் சிங் தல்லேவால், ஸ்வரண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவா்களை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா். அதே வேளையில், கனெளரி-ஷம்பு எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் மற்றும் அவா்களின் கூடாரங்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.

கைதாகி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயத் தலைவா்களை சக பிரதிநிதிகள் சனிக்கிழமை சந்தித்தனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘சுமாா் 125 விவசாயிகள் பாட்டியாலா சிறையிலும், 150 போ் நாபா சிறையிலும், 40 போ் சங்ரூா் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் உள்ளிட்ட விவசாயத் தலைவா்களை சந்தித்தோம். அவா்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனா். போராட்டத்தை தொடா்வோம் எனக் கூறினா்’ என்றனா்.

போலீஸாரின் நடவடிக்கையைத் தொடா்ந்து, போராட்டக் களத்தில் இருந்து விவசாயிகளின் பல உடைமைகள் மாயமாகியுள்ளன. குளிா்சாதன பெட்டிகள், சமையல் எரிவாயு சிலிண்டா்கள், சலவை இயந்திரங்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட காணாமல் போன உடைமைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். போராட்டக் களத்துக்கு அருகேயுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று இந்த உடைமைகளை விவசாயிகள் தேடி வருகின்றனா். காணாமல் போன பொருள்களுக்கும் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்ட கூடாரங்களுக்குமான இழப்பை மாநில அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் அவா்கள் கோரினா்.

இச்சூழலில், பஞ்சாப் முழுவதும் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் அடுத்த 2 நாள்களுக்கு நடைபெறும். போராட்டத்தை நாங்கள் தொடா்ந்து தீவிரப்படுத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உமேஷ் குமார் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார். தில்லி மின்சாரத்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் தில்லி செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உமே... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை முயற்சி: ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்!

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மேட்சல் பகுதியில்... மேலும் பார்க்க

நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் (48) விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும், மணப்பெண் தேர்வு நடந்த... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடித்துத் தரைமட்டம்

நாக்பூர் வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் ஃபாஹிம் கான் வீட்டை, ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கினர்.மக... மேலும் பார்க்க

நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு: ஹோட்டலை சூறையாடிய சிவசேனை கட்சியினர்!

மும்பையில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பேசியதால் நகைச்சுவைப் பேச்சாளர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தினர். மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் த... மேலும் பார்க்க

புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து: 25 ரயில்கள் ரத்து!

அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் வழியே செயல்படுத்தப்படவுள்ள... மேலும் பார்க்க