`விவாகரத்து கோரி மனு தாக்கல்' - விசாரணைக்கு ஒரே காரில் வந்து சென்ற ஜி.வி பிரகாஷ் - சைந்தவி
பள்ளி தோழியான சைந்தவியை , கடந்த 2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். திருமண வாழ்வில் இருந்து பிரிந்தாலும், எங்களுடைய நட்பு தொடர்வதாக விவாகரத்து அறிவிப்பின்போது கூறியிருந்தனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து இசைக்கச்சேரிகளிலும் கலந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து மனு தாக்கல் செய்ய ஒரே காரில் வந்துள்ளனர்.
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி இன்று இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்திருந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி ஆகியோர், விசாரணை முடிந்து ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.#GVPrakash#Saindhavipic.twitter.com/X5o6xHrkqM
— Kollywood Street (@KollywoodStreet) March 24, 2025
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
