விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி மனுத்தாக்கல்!
விவாகரத்து கோரி ஜி. வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து மனு அளித்துள்ளனர்.
தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை. சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
இதையும் படிக்க: சிக்கந்தர் டிரைலர்!
விவாகரத்துக்கு முடிவுக்கு பின்பும் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாடியது ரசிகர்களிடம் வருத்தத்தை அளித்தது. இவர்கள் தங்களின் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலரும் விரும்பினர்.
இந்த நிலையில், விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.