விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீரமைப்பு, வக்காளர் அடையாள அட்டை குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை அமைதியாகும்படி சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அமளி கட்டுக்குள்வரவில்லை என்பதால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
மாநிலங்களவையில் மத்திய சட்டப்பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, `` காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக பேசுகிறார். இது எப்படி சரியாகும். அண்ணல் அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அறவே கூடாது என வலியுறுத்தியிருக்கும் நிலையில், சட்டத்தை திருத்துவோம் எனப் பேசியிருக்கிறார். இது எப்படி சரியான நடைமுறையாகும்" எனப் பேசினார்.
மத்திய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத்தான் குறிப்பிட்டு பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ.க எம்.பி-களும் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டிருக்கிறது.