``என்னுடைய சொந்த பணத்தை தருவேன்'' - சுனிதா வில்லியம்ஸ் குறித்த கேள்விக்கு ட்ரம்ப...
ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு
தெலங்கானாவில் மாநில அரசின் கடன் வாங்கும் போக்கால், தனிநபர் கடன் சுமை அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி குற்றம் சாட்டினார்.
தெலங்கானா சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. விவாதத்தில், பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி கூறியதாவது, ``ரேவந்த் ரெட்டி தலைமையிலான மாநில அரசு, நாள்தோறும் ரூ. 1,700 கோடி வாங்குவதன் மூலம், அதன் மொத்தக் கடனை ரூ. 8.6 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது.
ரேவந்த் ரெட்டி அரசு, ஒரு நிமிடத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வாங்குவதால், தனிநபர் கடன் சுமை தற்போது ரூ. 2.27 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க:யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்திய போதிலும், கடன் வாங்கும் போக்கை மாநில அரசு நிறுத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவுக்கு புதிய திட்டங்களோ நிதியோ ஒதுக்காமல் பாஜக அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்.பி.க்களும் கூறினர்.
இருப்பினும், தங்கள் தோல்வியை மறைக்க, காங்கிரஸார் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்று மகேஷ்வர் கூறினார்.