சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
ரமலான் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு தொடங்கியது!
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.
ரமலான் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் - கன்னியாகுமரி விழாக்கால சிறப்பு விரைவு ரயிலானது (06037) வரும் 28 ஆம் தேதியும், மறுவழித்தடத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06038) வரும் 31 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்!
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இயக்கப்படும் ரயில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி இரவு 11.50-க்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
மறுவழித்தடத்தில் மாா்ச் 31-ஆம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று(மார்ச் 23) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.