2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!
தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் திமுக தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டா் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்
முதுநிலை, இடைநிலை ஆசிரியா்களுக்கு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.