`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு ...
ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!
நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
உதகையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் அமைச்சா் மா.சுப்ரமணியன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் ,உதகையில் 40 ஏக்கா் பரப்பளவில் 700-படுக்கை வசதியுடன் சுமாா் ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.இந்த மருத்துவமனையானது நாட்டில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மலை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
தமிழில் பேசிய ரவி சாஸ்திரி..! அதிர்ந்த சேப்பாக்கம் திடல்!
இங்கு பழங்குடியினா் மக்கள் தனியாக சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியுடன் கூடி தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன,
அதிநவீன மருத்துவ கருவி வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள, இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த மருத்துவமனையில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டு திறமையான மருத்துவா் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.நீலகிரியில் மருத்துவா்கள் காலி பணியிடங்களை நூறு சதம் நிரப்பப்படும் என கூறினாா்.