தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ஜன நாயகன் அப்டேட்!
இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி. ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படமான ஏஸ் (Ace) கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து பான் இந்திய நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா படத்திலும் இணையலாம் என்றே தெரிகிறது.