தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இளையராஜா வழிபாடு!
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று(மார்ச் 24) வழிபாடு மேற்கொண்டார்.
கர்நாடக மாநிலம், கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூகாம்பிகை தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது அக்குள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
கொல்லூரில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் மூகாம்பிகை என்றும், இறைவன் க்ரோதீஸ்வர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க: கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்
பரசுராமரால் அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவிலாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள். செளபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள அன்னையின் இந்த ஆலயம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று(மார்ச் 24) பிரார்த்தனை மேற்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.