எதிர்க்கட்சி முதல்வர்கள் மக்களை திசைதிருப்பலாமா? -தமிழிசை சௌந்தரராஜன்
CSK vs MI : 'தோனி Uncapped ப்ளேயரா?' - பத்திரிகையாளர் சந்திப்பில் சிரித்து உருண்ட சூர்யகுமார்!
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. அதில், மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் ரொம்பவே ஜாலியாக பேசியிருந்தார். குறிப்பாக, 'Uncapped' ப்ளேயர் தோனி என கேட்கப்பட்ட கேள்விக்கு பத்திரிகையாளர் சந்திப்பு அறையிலேயே வாய்விட்டு சிரித்துவிட்டார்.

சூர்யகுமார் யாதவ்வின் பத்திரிகையாளர் சந்திப்பின் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.
சென்னை அணியில் நிறைய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
சூர்யா : Only Sixers (சிரித்துக்கொண்டே..)
2013 க்கு பிறகு மும்பை அணி சீசனின் முதல் போட்டியில் வென்றதே இல்லையே. இந்த முறை அந்த துயரம் மாறுமா?
நீங்கள் சொல்லிவிட்டீர்களே. நாங்கள் வென்றுவிடுகிறோம். (ஜாலியாக..) சீசனின் முதல் போட்டியை வென்று பாசிட்டிவ்வாக தொடங்குவது முக்கியம்தான். ஆனால், இது நீண்ட சீசன். 14 போட்டிகள் இருக்கிறதென்பதால் மீண்டு வரலாம். ஆனாலும், இந்த முறை அந்த 11 வருட ரெக்கார்டை மாற்றுவோம் என நினைக்கிறேன்.

மெகா ஏலத்துக்கு பிறகு நடக்கும் சீசன் இது. உங்கள் அணியின் முக்கிய வீரர்களை தக்க வைத்திருக்கிறீர்கள். ஆனாலும் நிறைய இளம் வீரர்கள் புதிதாக வந்திருக்கிறார்கள். அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள என்ன செய்வீர்கள்?
அணியில் புதிதாக இளம் வீரர்கள் நிறைய பேர் இணைந்திருக்கிறார்கள். எனக்கும் இன்னும் பெரிதாக வயதாகவில்லை. அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அவர்களை டின்னருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அணியின் சூழல் பற்றி புரியும். சீனியர்களோடு தயக்கமின்றி இணைய முடியும். எங்கள் அணியில் நிறைய இளம் திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நிறைய பேசும்போதுதான் அவர்களின் பலம் பலவீனங்கள் பற்றியும் முழுமையாக தெரியும்.
சென்னை அணியின் 'Uncapped' வீரரான தோனியை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள்?
(கேள்வியை கேட்டவுடனேயே சிரித்துவிட்டார்.)
இத்தனை வருடமாக அவரை யாராலும் கட்டுப்படுத்த முடிந்ததா? போட்டிக்காக சென்னை வரும்போதெல்லாம் அவர் பெவிலியனிலிருந்து வெளியே வரும் தருணத்தை கண்டு நானும் மகிழ்ந்திருக்கிறேன். அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். இனியும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நாளை அவருக்கு எதிராக அணியை தலைமையேற்று வழிநடத்தப் போகிறேன். அது கொஞ்சம் சவாலான விஷயம்தான்.

பத்திரிகையாளர் சந்திப்பின் கடைசி கேள்வி இதுதான். பதில் சொல்லி முடித்துவிட்டு எழுந்து போகும்போதும் 'uncapped playerrr...' எனக் கூறி ஜாலியாக அந்த கேள்வியை நினைத்து சிரித்துக் கொண்டே சென்றார்.