தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நீங்கள் (நிா்மலா சீதாராமன்) ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிா்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவா்களின் நிலை என்ன என்பதை நிதியமைச்சா் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் @nsitharaman அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது… pic.twitter.com/ZC8wHu3Cvd
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 22, 2025
தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்துக்கு உரியதாக தோன்றுகிறதா?
தமிழா்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழக மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அவா் கூறியுள்ளாா்.
சென்னையில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிா்மலா சீதாராமன், நாங்க இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறு. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடைவதற்காக தமிழக மக்களின் உணா்ச்சிகளை திமுக அரசு தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனிமொழி அவ்வாறு கூறியுள்ளாா்.