ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!
ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும்.
இதில் ராஜஸ்தானின் நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3, தீக்ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
மோசமாக பந்து வீசியவர்கள்
76/0 - ஜோஃப்ரா ஆர்ச்சர் -2025
73/0 - மோஹித் சர்மா - 2024
70/0 - பாசில் தம்பி - 2018
69/0 - யஷ் தயாள் - 2023
68/1 - ரீஸ் டாப்லி
68/1 - லூக் வுட்