செய்திகள் :

Vijay: ``விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?'' - சாடும் விஜய்

post image

அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் `ஜாக்டோ ஜியோ' அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்
ஜாக்டோ ஜியோ போராட்டம்

அந்த அறிக்கையில், ``தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள். விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர்.'' எனவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள். ஊர்ப்புற நூலகர்கள். கணினி உதவியாளர்கள்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் - விஜய்யின் அறிக்கை
ஜாக்டோ ஜியோ போராட்டம் - விஜய்யின் அறிக்கை

சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.

எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள். விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டம் - விஜய்யின் அறிக்கை
ஜாக்டோ ஜியோ போராட்டம் - விஜய்யின் அறிக்கை

இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`என் வேலையை காலி பண்ணி விட்டுடுவீங்க போல' என்றார் வடிவேலு சார் - நடிகை ராதா பேட்டி

23 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிற முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. இப்போதும் ஓட்டை ஒடிசலான ஒரு பேருந்தைக் கண்டால் “என்னது சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸ... மேலும் பார்க்க

L2: Empuraan: "Lucifer 3-ல சிவகார்த்திகேயன் கூட ஒர்க் பண்ணலாம்" - Mohanlal, Prithviraj Pressmeet

Empuraan: "நம்ம பட நிகழ்ச்சிக்கு பிரதீப் ரங்கநாதன் ஆங்கர் பண்றாரான்னு..." - ப்ரித்விராஜ் கலகலவேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vett... மேலும் பார்க்க

Amy Jackson: 'வண்ணம் நீயே, வானம் நீயே' நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை!

`மதராசப்பட்டினம்' படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு `ஐ', `2.0', `தெறி', `கெத்து', `தங்க மகன்' எனப் பல படங்களில் நடித்தார். அதன் பிறக... மேலும் பார்க்க

`மீண்டு வருவேன்' - மரணத்தோடு போராடிய ஷிஹான் ஹுசைனி உயிரிழந்தார்!

கராத்தே ஹுசைனி என்று அறியப்படும் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் மற்ற சிலர் சார்பிலும்... மேலும் பார்க்க

Vijay: "விஜய் சார் சொன்ன அந்த வார்த்தை..." - விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.'கோமாளி', 'லவ் டுடே', `டிராகன்' என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து கோலிவுட்டை கலக்கி வர... மேலும் பார்க்க

Vijay: "உங்களுக்குச் சொன்னா புரியாது சார்" - விஜய்யைச் சந்தித்தது குறித்து அஸ்வத் மாரிமுத்து

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.'ஓ மை கடவுளே' படத்தை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு இப்படம் டப... மேலும் பார்க்க