டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!
எஃப்.ஐ.ஐ முதலீடுகளால், 6 வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!
மும்பை: அந்நிய நிதி வரத்தும், உள்ளநாட்டில் முதலீட்டாளர்கள் வங்கி, எண்ணெய் & எரிவாயு பங்குகளை வாங்கி குவித்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,201.72 புள்ளிகள் உயர்ந்து 78,107.23 புள்ளிகளாக வர்த்தகமானது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 6 வார உச்ச விலையான 77,984.38 புள்ளிகளில் நிலைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளால் உந்தப்பட்டு, உள்நாட்டு பங்குச் சந்தை உயர்ந்து முடிந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86-ஆக முடிவு!