கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர்: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
விழுப்புரம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில்,
விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வன் (57) மார்ச் 13 ஆம் தேதி பணியின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் அலுவலகம் எதிரில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நான்குசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 24 ஆம் தேதி மாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.
டிஆா்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்டில் முதுநிலை ஆசிரியா் தோ்வு
சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ்ச்செல்வனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.