செய்திகள் :

சூடான் ராணுவத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி?

post image

சூடான் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

வடக்கு டர்ஃபூர் மாநிலத்தின் தோரா சந்தையில் சூடான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (ஆர்.எஸ்.எஃப்.) குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு சூடான் ராணுவம் தற்போது வரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

கடந்த மார்ச் 24 நடைபெற்ற வான்வழித் தாக்குதல் மற்றும் கார்டூமிலுள்ள மசூதியில் துணை ராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களைக் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மக்களின் மீதான தாக்குதல்களினால் கடுமையாக பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் சூழலில் சூடான் ராணுவம் நேற்று (மார்ச் 25) அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை பச்சை நிறத்திலும், துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை சிவப்பு நிறத்திலும் குறிப்பிட்டு முதல்முறையாக வரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவர்களது முகப்புத்தக கணக்கில் பதிவிட்டுள்ளதாவது, சூடான் ராணுவப் படைகள் மற்றும் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற படைகள் கிளர்ச்சியை முடிவுக்கொண்டு வந்து பாதுகாப்பை நிலைப்படுத்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சூடானின் ராணுவப் படைக்கும் ஆர்.எஸ்.எஃப். துணை ராணுவப் படைக்கும் இடையிலான மோதலில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 15 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க