ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!
நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு ஒளிபரப்பாகும் புதிய தொடர்!
ஆடுகளம் தொடரின் முன்னோட்டக் காட்சி ஒளிபரப்பாகி 4 மாதங்கள் ஆன நிலையில், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா டேவிஸ்.
இவர் விடியும் வரை பேசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, ஆக்கம் மற்றும் குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
சின்ன திரையில் அன்பே வா தொடரில் பூமிகா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற டெல்னா டேவிஸ், பின்னர், இத்தொடரில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரில் டெல்னா டேவிஸ், மெளன ராகம் -2 தொடர் பிரபலம் சல்மானுல் பாரிஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்தொடரின் படப்படிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதையும் படிக்க: இதயம் - 2 தொடரில் சிறப்புத் தோற்றத்தில் வீரா நாயகன்!
இந்த புதிய தொடருக்கு ஆடுகளம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரின் முன்னோட்டக் காட்சியும் 4 மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு தேதி, நேரம் குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதற்குக் காரணம் முக்கியத்துவம் பெறும் நேரமான(Prime Time) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்ய தொடர் குழு திட்டமிட்டு இருந்ததால், படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தாலும் இத்தொடர் ஒளிபரப்பு செய்யாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஞ்சனி தொடரை நிறைவடையவுள்ளதால், இரவு 10 மணிக்கு அன்னம் தொடர் மாற்றப்பட்டு, இரவு 7 மணிக்கு ஆடுகளம் தொடர் ஒளிபராப்பாகும் என்றும் தகவல் தெரியவந்துள்ளது.