ரமலான் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இயக்கப்படும் ரயிலின் தேதி மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து போத்தனூருக்கு மாா்ச் 30-ஆம் தேதி இரவு 11.20-க்கு சிறப்பு ரயில் (எண் 06027) இயக்கப்படும் என கடந்த மாா்ச் 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ரயில் மாா்ச் 30-ஆம் தேதிக்கு பதிலாக மாா்ச் 28-ஆம் தேதி இரவு 11.50-க்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக முன்னா் அறிவிக்கப்பட்டதுபோல் மாா்ச் 31-ஆம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.